மேகதாது விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேகதாது விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
Published on

சென்னை: 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான திட்ட அறிக்கை  தயாரிக்கப்பட்டு மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு உள்ளிட்ட காவிரி பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com