

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் 262 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அசார் அலி 59 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 56 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் பெரேரா, ஹெராத் தலா மூன்று விக்கெட்டும், லக்மல் மற்றும் காமேஜ் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோஹைல்
முதல் இன்னிங்சில் 220 ரன்கள் முன்னிலைப் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. கருணா ரத்னே (7), சில்வா (3), சமரவிக்ரமா (13), லக்மல் (1), சண்டிமல் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. மெண்டிஸ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.
கருணாரத்னே அவுட்டாகி வெளியேறும் காட்சி
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெண்டிஸ் உடன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 59 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். 70 ரன்னாக இருக்கும்போது பெர்னாண்டோ ஆட்டம் இழந்தார். இலங்கை அணி 70 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.