பாகிஸ்தானில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை விரட்டியடித்த அதிகாரிகள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்த சிறப்பு அழைப்பாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜய் பிஸாரியா
அஜய் பிஸாரியா
Published on

இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று மாலை சில முக்கிய பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பாளர்களாக சிலருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

இந்த அழைப்பாளர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தூதரகம் அளிக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க வேண்டாம் என்று மிரட்டல் விடுத்தனர். கண்டுபிடிக்க முடியாத ரகசிய தொலைபேசி எண்களில் இருந்து வந்த இந்த மிரட்டல்களுக்கு அடிபணியாமல் பலர் இப்தார் விருந்துக்கு வந்தனர்.

இந்திய தூதரகம்

X

Maalai Malar
www.maalaimalar.com