பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி - மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டி உள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி - மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்
Published on

இஸ்லாமாபாத்:

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது.

ஓட்டு எண்ணிக்கையின் விவரங்களை விரிவாக வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள் மோடி அரசின் இந்த வெற்றியை தலைப்பு செய்திகளாக்கின.

இந்தநிலையில், பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டின.

அந்நாட்டின் பழமைவாய்ந்த பத்திரிகையான டான் நாளிதழ் தனது முதல் பக்கத்தில், “பொதுத்தேர்தலில் மோடி மகத்தான வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தேசத்தின் பாதுகாவலனாக பார்க்கப்படுகிறார்” என செய்தி வெளியிட்டது.

இதே போல் அந்நாட்டின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் மோடியை புகழ்ந்து செய்திகள் வெளியிட்டன. அத்துடன் அந்நாட்டின் செய்தி தொலைக்காட்சி சேனல்களில், மோடி மீண்டும் பிரதமராகி இருப்பது இந்திய-பாகிஸ்தான் உறவில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சிறப்பு விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com