காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் 13-ம் தேதி இம்ரான் கான் பேரணி

காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வரும் 13-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான்
இம்ரான் கான்
Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் ஷா குரேஷி, ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின் உள்விவகாரம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட  பிரச்சனை. ஜம்மு காஷ்மீரில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிலையில், இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக 13-ம் தேதி பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான்  இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா வசமுள்ள காஷ்மீரில் அரசுப்படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதையும், அங்குள்ள மக்களுக்கு பாகிஸ்தான்
தொடர்ந்து ஆதரிக்கும் என்பதையும் உலகத்துக்கு தெரிவிக்கும் வகையில் வரும் 13-ம் தேதி முசாபராபாத்தில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் தலைநகர்) மாபெரும் பேரணி நடத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com