பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - ராணுவ தளபதி பிபின் ராவத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் குற்றம் சாட்டினார்.
பிபின் ராவத்
பிபின் ராவத்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தானும் அடங்கும்.

இந்த பகுதிகளில் கில்ஜித் பல்டிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com