ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
படைவீரர்கள் தாக்குதல்
படைவீரர்கள் தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் கடந்த வாரம் முதல் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ளது உரி பகுதி. இன்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com