பஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் நேற்றிரவு ஊடுருவ முயன்றது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த விமானத்தை சுட முயன்றபோது திடீரென மாயமானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெரோஸ்பூர்:

காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல பஞ்சாப்பில் உள்ள எல்லை பகுதியிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது.

பாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் நேற்று இரவு 8.40 மணி அளவில் பறந்தது. அந்த விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்ற போது அது மாயமானது.

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) மூத்த அதிகாரி கூறியதாவது:-

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் டெண்டிவால் கிராமத்தில் இந்திய வான் எல்லையில் நேற்று இரவு 8.40 மணியளவில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர். அந்த ஆளில்லா விமானம் 4 முதல் 5 நிமிடங்கள் பறந்தது.

அந்த விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்த முயன்றனர். ஆனால் அது அதற்குள் மறைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளில்லா விமானம் பறந்ததை தொடர்ந்து எல்லை பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com