பாடியில் மளிகை கடையில் குட்கா விற்ற வியாபாரிகள் 2 பேர் கைது

பாடியில் மளிகை கடையில் குட்கா விற்ற வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடியில் மளிகை கடையில் குட்கா விற்ற வியாபாரிகள் 2 பேர் கைது
Published on

அம்பத்தூர்:

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல இடங்களில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாடியில் உள்ள மளிகை கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கொரட் டூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 பெட்டிகளில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

இதையடுத்து கடை உரிமையாளரான, வியாபாரிகள் பாலசுப்பிரமணியன், கோபிநாத் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com