பாடியில் 20 மாடி குடியிருப்பில் தீ விபத்து- 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

சென்னையை அடுத்த பாடி லூக்காஸ் மேம்பாலம் அருகில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
பாடியில் 20 மாடி குடியிருப்பில் தீ விபத்து- 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
Published on

சென்னை:

சென்னையை அடுத்த பாடி லூக்காஸ் மேம்பாலம் அருகில் 20 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 18 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தீயின் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்து மக்கள் பதட்டத்துடன் வெளியேறினார்கள். தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் சாதாரன தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க இயலாது என்பதால் ராட்சத தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

அம்பத்தூர், வில்லிவாக்கம், ஜெ.ஜெ. நகர், கோயம்பேடு, எழும்பூர் ஆகிய பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்களில் உள்ள நவீன கருவிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

18 மாடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட ஏணியின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி கூறுகையில், அடுக்கு மாடியில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் அதற்கான வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.

தீ மேலும் அருகில் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதட்டம் அடைந்தனர். தீ கட்டுக்குள் வந்த பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com