நம்ம பையன் கொன்னுடான்யா.. -ரெய்னாவின் பாராட்டு யாருக்கு?

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, நேற்றைய போட்டியில் இந்திய வீரர் ஒருவரின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். யார் என்பதை பார்ப்போம்.
சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
Published on

இந்தியா - வங்காள தேச அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து 314 ரன்களை குவித்தது.

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அதன் பின்னர் கே.என்.ராகுல், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து களம் இறங்கி சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தபோதும் அவரது விளையாட்டு சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்ம பையன் ரிஷப் பண்ட் ஆட்டத்தை சிறப்பாக விளையாடி கொன்றுவிட்டான். நம்பிக்கையான ஆட்டம். அதி சிறப்பான ஃபார்ம்’ என ரிஷப்பை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com