ஓட்டேரி காசநோய் ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை

ஓட்டேரி காசநோய் ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டேரி காசநோய் ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை
Published on

ராயபுரம்:

புளியந்தோப்பு கிரெ நகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 62) காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

உடல்நிலை மோசம் அடைந்ததால் கடந்த 24-ந் தேதி அவரை ஓட்டெரியில் உள்ள காசநோய் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்ந்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஏகாம்பரத்தை அவரது உறவினர்கள் சரிவர வந்து கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இது பற்றி அவர் அருகில் உள்ள மற்ற நோயாளிகளிடம் கூறி புலம்பி வந்தார்.

நேற்று இரவு கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரம் வரை திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த மற்ற நோயாளிகள் சென்று பார்த்த போது ஏகாம்பரம் கழிவறை ஜன்னலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து ஓட்டேரி போலீசுக்கு புகார் செய்யப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com