கமல் பேசினால் மட்டுமல்ல தவக்களை பேசினால் கூட ஓ.பி.எஸ் பதில் சொல்வார்: அமைச்சர் சிவி.சண்முகம் கிண்டல்

கமல் பேசினால் மட்டுமல்ல தவக்களை பேசினால் கூட ஓ.பி.எஸ் பதில் சொல்வார் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் கூறியுள்ளார்.
கமல் பேசினால் மட்டுமல்ல தவக்களை பேசினால் கூட ஓ.பி.எஸ் பதில் சொல்வார்: அமைச்சர் சிவி.சண்முகம் கிண்டல்
Published on

சென்னை: 

சிறையில் உள்ள தனது மகனை பரோலில் விடுதலை செய்யுமாறு தயார் அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகத்தை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார். 

இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து ஒருசில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சண்முகம் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார். மேலும், ”கமல் பேசினால் மட்டுமல்ல தவக்களை பேசினால் கூட ஓ.பி.எஸ் பதில் சொல்வார் ” என்றார். 

மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ’நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் போராடினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com