16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு பதிப்பான ஒப்போ F3 லைட் VND 5,490,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஒப்போ A57 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டது.

ஒப்போ F3 லைட் சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் எச்டி, 720x1280 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ்
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- கலர் ஓ.எஸ். 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர், PDAF, எல்இடி பிளாஷ்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 2900 எம்ஏஎச் பேட்டரி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com