ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுடன் கிரிக்கெட் விளையாடிய கலெக்டர்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. காந்தி மைதானத்தில் பார்வையற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டியினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்திவ்யா தொடங்கி வைத்தார்.
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுடன் கிரிக்கெட் விளையாடிய கலெக்டர்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. காந்தி மைதானத்தில் பார்வையற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டியினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்திவ்யா தொடங்கி வைத்தார்.

போட்டியானது மாற்றத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சுடர்ஒளி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பார்வையற்றோர்களுக்காக இரண்டு நாட்கள் நடத்தப்படும் 20 ஓவர் போட்டி ஆகும். இதில் மதுரை அணிக்கும், பெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணிக்கும் நடைபெறுகிறது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தமிழ்நாடு அளவில் பார்வையற்றோர்களுக்காக நடத்தப்படும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கலெக்டர் கூறினார்.

இப்போட்டியில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com