கொரோனாவை வென்ற 1 மாத குழந்தை

மும்பை ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 1 மாத குழந்தை உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது
குழந்தை - கோப்புப்படம்
குழந்தை - கோப்புப்படம்
Published on

மும்பை:

மும்பையை சேர்ந்த 1 மாத குழந்தை கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல் நலம் தேறியது. இதனை தொடர்ந்து நேற்று குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

அந்த குழந்தையை தாயிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். தாய் தனது குழந்தையை அரவணைத்தப்படி முகமலர்ச்சியுடன் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பி உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com