காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்க தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காதிபோரா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஓரிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இன்று காலை புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com