டிராக்டர் பந்தயத்தின்போது தகர கொட்டகை இடிந்து விழுந்தது - 17 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலத்தில் டிராக்டர் பந்தயத்தை காண்பதற்காக தகர கொட்டகையில் ஏறியபோது கூரை இடிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்தனர். #RajastanAccident #RajastanTractorRace
டிராக்டர் பந்தயத்தின்போது தகர கொட்டகை இடிந்து விழுந்தது - 17 பேர் படுகாயம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ஆனாஸ் மண்டி என்ற இடத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று டிராக்டர் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியைக் காண்பதற்காக சுமார் 5000 மக்கள் திரண்டிருந்தனர். பாய்ந்து வரும் டிராக்டர்கள் தங்களுக்கு தெரியாததால், சிலர் தகரக் கொட்டகையில் ஏறினர். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏறியதால் அந்த கொட்டகை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால், அவர்கள் ஸ்ரீகங்காநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  

டிராக்டர் போட்டி நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் போட்டி அமைப்பாளர்கள் அனுமதி பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  #RajastanAccident #RajastanTractorRace

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com