

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்று, புதிய அமைச்சரவை செயல்படத் தொடங்கியது.
அந்த அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பொறுப்பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் டுவிட்டர் கணக்கிற்கு மகாலட்சுமி என்ற பெண், ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், தனது குடும்ப உறுப்பினர்கள் இத்தாலிக்கு சுற்றுலா சென்றதாகவும் அப்போது அவர்களது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும், அதனால் உதவி செய்யும்படி குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து டுவிட்டரில் பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகம் தயாராக உள்ளது, என தெரிவித்துள்ளார்.