மூதாட்டி வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை

மதுரையில் மூதாட்டி வீட்டில் இருந்த 31 பவுன் நகை திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

மதுரை:

மதுரை மதிச்சியம் காந்தி நகரில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விமலா (வயது 65). இவரது மகன் ரமேஷ் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். இதனால் விமலா மட்டும் தனியாக இருந்தார். சம்பவத்தன்று விமலா வீட்டின் கதவை சாத்திவிட்டு கடைக்கு சென்றிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவிலிருந்த 31 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். இந்த நிலையில் வீட்டின் பீரோவை விமலா திறந்து பார்த்தபோது அதிலிருந்த நகைகள் திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவரது மகன் ரமேஷ் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com