தூத்துக்குடியில் முதியவர் தற்கொலை

தூத்துக்குடியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் முதியவர் தற்கொலை
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜுவ்காந்தி 3-ம் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதுமை காரணமாக லட்சுமணனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவலறிந்த முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com