யோகி ஆதித்யநாத் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

பீகாரில் நடைபெற்ற யோகி ஆதித்யநாத் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

பீகாரில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மாநிலம் முழுக்க வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அக்டோபர் 23 ஆம் தேதி மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போது மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அதில் உள்ள புகைப்படம் 2014 ஆம் ஆண்டு தேஷ் குஜராத் எனும் வலைதள செய்தி குறிப்பில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் 2014 பிராசர கூட்டத்தில் எடுக்கப்பட்டது ஆகும். 

மேலும் இந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார கூட்டத்திற்காக கூடியதாகும். அந்த வகையில் வைரல் புகைப்படம் பீகாரில் எடுக்கப்படவில்லை என்பதும், இது யோகி ஆத்யநாத் பிரசார கூட்டத்தை காண குவிந்த கூட்டம் இல்லை என்பதும் தெளிவாகிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com