ஓச்சேரி அருகே விபத்து- வாலிபர் பலி

ஓச்சேரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காவேரிபாக்கம்:

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்தவர் வாசன் (18). இவர்கள் இருவரும் உறவினர்கள். நேற்று ஆனந்தராஜின் சகோதரி மகள் சுபநிகழ்ச்சிக்காக திருவேற்காட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அவளூர் அருகே முன்னே சென்ற கன்டெய்னர் லாரியை முந்திசெல்ல முயன்றபோது லாரியில் உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் லாரி மோதி ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாசன் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த அவளூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com