திருபுவனை அருகே நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

திருபுவனை அருகே நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை அருகே நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே கலிதீர்த்தாள் குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் உளுந்தூர்பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமாவதி. இவர்களது மூத்த மகள் சிந்துஜா. (வயது 18). இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தொடக்கத்தில் இருந்தே சிந்துஜாவுக்கு நர்சிங் படிக்க விருப்பம் இல்லை. இதனை பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் ஏற்காமல் கட்டாயப்படுத்தியதால் சிந்துஜா விருப்பமின்றி படித்து வந்தார். 

இந்த நிலையில் மன உளைச்சலுடன் கல்லூரிக்கு சென்று வந்த சிந்துஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பிரேமாவதி, மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துஜாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சிந்துஜா பரிதாபமாக இறந்து போனார். 

இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com