

சென்னை:
அ.தி.மு.க. அம்மா அணி வடசென்னை தெற்கு மாவட்ட புதிய செயலாளராக பி.சந்தான கிருஷ்ணனை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர் பி.சந்தானகிருஷ்ணன் தினகரனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின், பொருளாளர் கிரிநாத், பகுதி செயலாளர்கள் ராமஜெயம், சுகுமார், அம்மா பேரவை பி.சுகுமார் உள்ளிட்ட 300-க்கும் நிர்வாகிகள் அவருடன் சென்று தினகரனை சந்தித்தனர்.
மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சந்தான கிருஷ்ணன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
பகுதி இளைஞர் அணி, திரு.வி.க. நகர் தொகுதி செயலாளர், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில இணை செயலாளர் போன்ற பொறுப்புகளில் இருந்து கட்சி பணியாற்றினார்.
மேலும் 75-வது வார்டு கவுன்சிலராகவும் சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கட்சியில் படிப்படியாக பொறுப்புகளை வகித்து வந்த சந்தானகிருஷ்ணன் தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.