

புதுடெல்லி:
உலக தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3310 (2017) பீச்சர் போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. எச்எம்டி குளோபல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 3310, நோக்கியா 3,. நோக்கியா 5, நோக்கியா 6 உள்ளிட்ட போன்களை அறிமுகம் செய்தது.
2ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 போனில் 2.4 இன்ச் QVGA 240x320 பிகசல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கிளாசிக் கீபோர்டு மற்றும் மஞ்சள், சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களில் கிடைக்கின்றது. இந்தியாவில் புதிய நோக்கியா 3310 ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
79.6 கிராம் எடை கொண்ட நோக்கியா 3310 சீரிஸ் 30+ இயங்குதளம் மற்றும் 16 எம்பி இன்டெர்னல் மெமரி, மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருப்பதோடு 2 எம்பி பிரைமரி கேமரா, 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
மைக்ரோ சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி , 3.5 எம்எம் ஹெட்போன் கனெக்டர் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்நேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்நேக் கேம் உலகின் அதிகம் விளையாடப்பட்ட வீடியோ கேமாக இருந்து வருகிறது.