திருவள்ளூர்: டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு நோயை தடுப்பதற்காக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்: டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியை தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பொறுப்பு முத்து அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் மேற்பார்வையில் திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ஆரம்ப சுகாதாரத்துறை டாக்டர் சரண்யா அழகு வெண்மணி தலைமையில் செவிலியர்கள் அன்னபூரணி, ஜாய்ஸ் செல்வாமேரி, பரிமளா ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

மேலும் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் கழிவு நீரை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொசு மருந்து மற்றும் பிளிச்சிங் பவுடர் தொடர்ந்து அடிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com