நிலக்கோட்டை அருகே லோடுமேனை அடித்து கொன்ற கும்பல்

நிலக்கோட்டை அருகே மதுரையை சேர்ந்த லோடுமேன் அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே லோடுமேனை அடித்து கொன்ற கும்பல்
Published on

நிலக்கோட்டை:

மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது38). இவர் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

அழகம்மாளின் தங்கையை நிலக்கோட்டை அருகில் உள்ள சிவஞானபுரத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அழகம்மாளின் தங்கைக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இது குறித்து அழகம்மாளின் தங்கை தனது மாமா பாலனிடம் கூறி வந்தார். நேற்று வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், வந்து சமாதானம் பேசுமாறும் பாலனை வரவழைத்திருந்தார்.

அதன்படி பாலன் நிலக்கோட்டைக்கு வந்தார். அதிகாலையில் அணைப்பட்டி செல்லும் டாஸ்மாக் கடை அருகே ரத்த காயங்ளுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார். அவரை மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர் என அழகம்மாள் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com