புதுவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: வாலிபருக்கு சரமாரி வெட்டு - 10 பேர் கைது

புதுவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு கோஷ்டி மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததையடுத்து 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சேதராப்பட்டு:

புதுவை கோரிமேடு அருகே நாவற்குளம் பெரியார் நகரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் தரப்பினரும், மணிகண்டன் தரப்பினரும் இரு கோஷ்டியாக புத்தாண்டை கொண்டாட ஏற்பாடு செய்தனர். இருதரப்பிலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது திடீரென ராஜ்குமார் வாங்கி வைத்திருந்த கேக்கை மணிகண்டன் கத்தியால் வெட்டி தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார். இதனை பார்த்ததும் ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்து மணிகண்டன் தரப்பினரிடம் தட்டிக்கேட்டனர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. பின்னர் இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். அப்போது திடீரென மணிகண்டன் வைத்திருந்த கத்தியை ராஜ்குமார் பறித்து அவரை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் இரு தரப்பினரும் ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ராஜ்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த முத்து, அய்யப்பன், அய்யனாரப்பன், வினோத் ஆகிய 5 பேரையும், மற்றொரு தரப்பில் மணிகண்டன், ராஜதுரை, விக்கி, யுவராஜ் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com