நேபாள பாராளுமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்தது- ஆளும் கட்சி படுதோல்வி

நேபாள பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த கூட்டணி 91 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.
நேபாள பாராளுமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்தது- ஆளும் கட்சி படுதோல்வி
Published on

நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது.

275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்டு மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் எண்ணப்பட்டன. பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த கூட்டணி 91 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.

இதில் முன்னாள் பிரதமர் கே.பி.ஒளி தலைலையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்டு வெனினிஸ்டு ) 66 இடங்களிலும், மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான (மாவோயிஸ்டு சென்டர்) 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.


இந்த தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை தழுவியது. கடந்த தேர்தலில் இது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தது.

இதன் கூட்டணி கட்சியான 2 மோதேசி கட்சிகள் 11 இடங்களை மட்டுமே பிடித்துள்ளன. மற்றும் ராஷ்டிரிய பிரஜா தந்தா கட்சி, முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாரை தலைமையிலான நயாசக்தி கட்சி மற்றும் சுயேட்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இடதுசாரி கூட்டணி நேபாளத்தில் ஆட்சி அமைக்கிறது. கே.பி.ஒளி பிரதமராகிறார். அவர் ஜபா-5 பாராளுமன்ற தொகுதியில் 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com