நெகமத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

நெகமத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

நெகமம்:

நெகமம் கடைவீதியை சேர்ந்தவர் ராஜசேகர். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வலட்சுமி (வயது 45). இவர்களது மகன் லோகபாபு (8). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி முடிந்து வந்த லோகபாபுவை பெற்றோர் டியூசனுக்கு அனுப்பி வைத்தனர். டியூசன் முடிந்த பின்னர் அவரது தாய் செல்வலட்சுமி மகனை அழைத்து வந்தார். அங்குள்ள கிழக்குபிள்ளையார் கோவில் வீதி அருகே வந்தபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் செல்வலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் கொள்ளையன் தப்பி சென்று விட்டான்.

இது குறித்து நெகமம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com