நாசரேத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

நாசரேத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது
Published on

நாசரேத்:

நாசரேத் மோசஸ் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சேர்மக்கனி (வயது 36) இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்துவருகிறார். இவர் நாசரேத் பஜாரில் கடைக்கு சென்றுவிட்டு விட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போதுபின்னால் வந்தநாசரேத் மாணிக்க வாசகபுரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கண்ணன் (40) என்பவர் சேர்மக்கனியை வழிமறித்துஅவதூறாகபேசி கொலைமிரட்டல் விடுத்தார். இது குறித்து சேர்மக்கனி நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com