பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் இன்று பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள், தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசலாம் எனத் தெரிகிறது.
அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி
அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

அமெரிக்கா - இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தரப்பில்  அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இரு தலைவர்களும் காணொலி வாயிலாக இன்று சந்திக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையிலும், தடைகளை மீறி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலுக்கு இந்தியா தயாராகி உள்ள சூழலில் ஜோ பைடன் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com