ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்று பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல்

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
ATM machine broken
Published on

ஆந்திர மாநிலம் தா அனந்தபுரம் மாவட்டம், டிபத்ரி பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து தூக்கி சென்றனர்.

அங்குள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை கொள்ளை நடந்ததை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மோப்ப நாய்களின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதோடு, சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஏடிஎம் தொடர்பான உபகரணங்கள், சிங்கனமலை மண்டலம், அக்குலேடு கிராமத்தில் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

போலீசார் இந்தச் சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com