ஒரே ஆண்டில் பேனா, பேப்பருக்காக ரூ.3,877 கோடி செலவு செய்த இந்திய வங்கிகள்: முதலிடத்தில் எஸ்பிஐ!

தனது மொத்த நிகர லாபத்தில் அதிகபட்சமாக 8.05% தொகையை (ரூ.122.7 கோடி) எழுதுபொருட்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளது ஐசிஎஃப்சி.
ஒரே ஆண்டில் பேனா, பேப்பருக்காக ரூ.3,877 கோடி செலவு செய்த இந்திய வங்கிகள்: முதலிடத்தில் எஸ்பிஐ!
Published on

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், 2025-26 நிதியாண்டில் மட்டும் காகிதம், எழுதுகோல், படிவங்கள், காசோலைப் புத்தகங்கள், பாஸ்புக்குகள், அறிக்கைகள் உள்ளிட்ட அச்சி மற்றும் எழுதுபொருட்களுக்காக ரூ.3877 கோடி செலவு செய்துள்ளன நாட்டின் முன்னணி வங்கி நிறுவனங்கள்.

முதலீட்டு தளமான Groww வெளியிட்ட தரவுகளின்படி, இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.986.4 கோடி செலவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இது வங்கியின் நிகர லாபத்தில் 1.22% ஆகும்.

ரூ.922.5 கோடியுடன் தனியார் வங்கிகளில் முதலிடமும், பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது ஹெச்டிஎஃப்சி. இது அதன் லாபத்தில் 1.26% ஆகும்.

ரூ.318.5 கோடியுடன் லாபத்தில் குறைந்த அளவு (0.58) செலவிட்ட வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது ஐசிஐசிஐ. தனது மொத்த நிகர லாபத்தில் அதிகபட்சமாக 8.05% தொகையை (ரூ.122.7 கோடி) எழுதுபொருட்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளது ஐசிஎஃப்சி.

X

Maalai Malar
www.maalaimalar.com