சத்தீஸ்கர்: கட்டிப்போட்டு, அடித்து, சிறுநீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட மனைவி - குழந்தைகள் முன்னிலையில் கணவர் செய்த கொடூரம்

குழந்தைகளையும் அடிக்கசொல்லி வீடியோ எடுத்த கொடூரன்.
கட்டிப்போட்டு, அடித்து, சிறுநீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட மனைவி - குழந்தைகள் முன்னிலையில் சத்தீஸ்கர் நபர் கொடூரம்
Published on

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜிதேந்திர காசியா என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஜிதேந்திர காசியா, அவரை அடித்து, கட்டிவைத்து, முடியை மொட்டையடித்து, முகத்தில் கரி மற்றும் எஞ்சின் ஆயிலை ஊற்றித் தேய்த்து துன்புறுத்தியுள்ளார். மேலும் சிறுநீரை குடிக்கச் சொல்லி தன் குழந்தைகளை முன்பே அப்பெண்ணை சித்வரதை செய்துள்ளார்.

மேலும் பிள்ளைகளை விட்டும் மனைவியை அடிக்கக் கூறியும், அவர்களை விட்டும் சிறுநீரை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், கடந்த 14ஆம் தேதி தனது கஷ்ட காலங்களில் உதவிய ஒருவரின் வீட்டில் அப்பெண் தங்கியுள்ளார். அதனை அறிந்து அங்கு சென்ற ஜிதேந்திரா இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

அங்கு வைத்தே தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், வேறு ஆண்டுகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டியதாகவும் அப்பெண் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளி ஜிதேந்திராவை கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com