விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்- போராட்டம் நடத்த முயன்ற நந்தினி கைது

விழுப்புரம் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற நந்தினி, அவரது தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நந்தினி, அவரது தந்தை கைது செய்து அழைத்து சென்ற போது எடுத்த படம்.
நந்தினி, அவரது தந்தை கைது செய்து அழைத்து சென்ற போது எடுத்த படம்.
Published on

மதுரை:

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை குடிபோதையில் கொடூரமாக எரித்து படுகொலை செய்த இருவரையும் உடனே தூக்கிலிட வேண்டும், டாஸ்மாக்கை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டை வாபஸ் பெற வேண்டும். வீட்டுக்கே மது சப்ளை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை மதுரை ஐகோர்ட்டு முன்பு வக்கீல் நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதூர் போலீசார் இன்று காலை நந்தினி வீட்டுக்கு வந்தனர். ஊரடங்கு சட்டத்தை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றதாக வக்கீல் நந்தினி, ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com