நம்பியூரில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு

நம்பியூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
அமைச்சர் கேஏ செங்கோட்டையன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
அமைச்சர் கேஏ செங்கோட்டையன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
Published on

நம்பியூர்:

நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், எலத்தூர் பேரூராட்சி செயல் அதிகாரி (பொறுப்பு) சசிகலா, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து எலத்தூர் குளத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். குளத்தில் இருந்து டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு திட்டம். இந்த திட்டம் மூலம் விரைவில் இந்த பகுதிகளைச் சேர்ந்த குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்விற்கான வழிவகைகள் செய்யப்படும். மேலும் எலத்தூர் குளத்தை சுற்றி 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படும்‘ என்றார்.

அதன்பின்னர் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன், அரசு வழக்கறிஞர் கங்காதரன், செல்வம், பிரபு, நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழரசி பழனிச்சாமி உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com