கிரிக்கெட் மட்டை தலையில் தாக்கி மாணவன் உயிருக்கு போராட்டம்

நாமக்கலில் விளையாடிய போது ஆசிரியர் கையில் இருந்து நழுவி சென்ற கிரிக்கெட் மட்டை தலையில் தாக்கி மாணவன் உயிருக்கு போராடி வருகிறார்.
கிரிக்கெட் மட்டை தலையில் தாக்கி மாணவன் உயிருக்கு போராட்டம்
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் நல்லூர் கந்தம்பாளையத்தை அடுத்த சித்தம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 13).

இவர் விட்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். விக்னேஸ்வரன் மற்றும் மாணவர்கள் சிலர் நேற்று பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் குப்புராஜ் அவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.

அப்போது மாணவர் ஒருவர் பந்தை வீச ஆசிரியர் குப்புராஜ் பந்தை அடிக்க முயன்றார். எதிர்பாராத விதமாக ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி சென்று அருகில் நின்று கொண்டிருந்த மாணவரின் பின் தலையில் பலமாக தாக்கியது.

இதில் நிலைகுலைந்த மாணவன் மயங்கி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மொளசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com