நாலுமாவடியில் வாலிபர் கொண்டாட்டம் நிகழ்ச்சி: மோகன் சி.லாசரஸ்-அப்பாத்துரை பங்கேற்பு

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வாலிபர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மோகன் சி.லாசரஸ் , அப்பாத்துரை தேவசெய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
நாலுமாவடியில் வாலிபர் கொண்டாட்டம் நிகழ்ச்சி: மோகன் சி.லாசரஸ்-அப்பாத்துரை பங்கேற்பு
Published on

நாசரேத்:

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வாலிபர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர்.

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊழியர் அப்பாத்துரை ஆகியோர் தேவசெய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் அனைத்து ஊர்களுக்கும் திரும்பிசெல்வதற்கு அரசு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனபொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com