

நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் புது வாழ்வு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் துணைவியார் ஜாய்ஸ் லாசரஸ் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார்.
மாநில அளவில் நடந்த சிலம்பாட்டத்தில் சாதனை படைத்த, தேர்வில் சிறந்து விளங்கிய இல்லக் குழந்தைகளுக்கும் பின்னர் இல்லக்குழந்தைகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் புது வாழ்வு சங்க குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் செய்திருந்தனர்.