

நாசரேத்:
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வாலிபர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகிறார்கள்.
ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ், ஊழியர் அப்பாத்துரை ஆகியோர் தேவசெய்தி கொடுக்கிறார்கள். கூட்டம் முடிந்தவுடன் அனைத்து ஊர்களுக்கும் திரும்பி செல்வதற்கு அரசு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து வருகிறார்கள்.