குருவின் இடத்தை ஒருபோதும் கூகுளால் ஈடுசெய்ய முடியாது: வெங்கையா நாயுடு

கல்விக் கண்ணை திறந்து வைக்கும் ஒரு குருவின் இடத்தை ஒருபோதும் கூகுளால் ஈடுசெய்ய முடியாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
Published on

விசாகப்பட்டினம்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘குருவின் இடத்தை ஈடுசெய்ய கூகுளால் ஒருபோதும் முடியாது. ஒரு குருவால் பல்கலைக்கழகத்துக்கு ஈடான அறிவை தரமுடியாது. ஆனால் அவருள் எல்லாமே அடக்கம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தில் ரூ.13.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர், தான் படித்த வகுப்பறைக்கு சென்ற அவர், அங்குள்ள மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அப்போது, ஆராய்ச்சி படிப்புக்கான தரம் மற்றும் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com