போலி ஆவணங்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 4 வெளிநாட்டவர்கள் கைது

போலி ஆவணங்கள் மற்றும் டிக்கெட்டுகள் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பெண்கள் உள்பட நால்வர் டெல்லி மற்றும் இம்பால் விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 4 வெளிநாட்டவர்கள் கைது
Published on

டெல்லி:

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலி டிக்கெட் மூலம் வந்திறங்கியுள்ளார். விமான நிலையத்தை விட்டு அப்பெண் வெளியேறும் போது மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மடக்கிப்பிடித்து குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல, மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில் போலி ஆவணங்கள் மூலம் இந்தியா வந்தடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com