முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் அடுத்த அரமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேதரத்தினம் (வயது 48). மீனவர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மீனவர்களுடன் வேதரத்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

அப்போது அங்குள்ள அலையாத்தி காடுகள் நிறைந்தலகூன் அருகே உள்ள கடல் முகத்துவாரம் பகுதியில் வேதரத்தினம் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென எதிர்பாராத விதமாக கடல்நீர் மற்றும் சேற்றில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து மீனவர்கள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படகு மூலம் வேதரத்தினம் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடலில் விழுந்து பலியான வேதரத்தினத்துக்கு ஆயியம்மாள் (40) என்ற மனைவியும் லோகித்வரன் (8), அஜய்(6), அஸ்வந்த்(4) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com