அரியானாவில் ரெயிலில் மாட்டுக்கறியுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

அரியானாவில் ரெயிலில் மாட்டுக்கறியுடன் சென்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியானாவில் ரெயிலில் மாட்டுக்கறியுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை
Published on

அரியானா மாநிலம் பல்லப்கார் அருகே உள்ள கண்டோவா கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஜூனைத், ஹசிப், ஷாகிர் ஆகியோர் டெல்லி சர்தார் பஜாரில் ரம்ஜானையொட்டி பொருள்கள் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு லோக்கல் ரெயிலில் சென்றனர்.

ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சகோதரர்கள் மூவரும் முண்டியடித்துச் சென்று இடம் பிடித்தனர். அப்போது அவர்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. சகோதரர்கள் தங்களுடன் ஒரு பையில் ரம்ஜான் பொருள் மற்றும் உணவு எடுத்துச்சென்று இருந்ததால் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தது.

அவர்கள் பையில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி சகோதரர்களை 20-க்கும் மேற்பட்ட கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியது. கத்தியாலும் குத்தினார்கள். இதில் ஜூனைத் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

மற்ற2 சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் வந்து உடலை மீட்டனர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தும் ரெயில்வே போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், தகராறு ஏற்பட்ட போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com