கருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்

கருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நாகர்கோவில்:

கருங்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் போலீசார் கருங்கலை அடுத்த கொல்லன்விளை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றிருந்தனர்.

அப்போது ஜெகன் வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்களை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினார்கள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் அரசுப்பணியை செய்ய விடாமலும் தடுத்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விபின், சுனிதா, அஜிதா, கமலாபாய் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com