நகராட்சி பெண் துப்புரவு ஊழியர் எலிமருந்து தின்று தற்கொலை

முதலியார்பேட்டையில் நகராட்சி பெண் துப்புரவு ஊழியர் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை அனிதா நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி சத்யா (வயது 49). இவர் புதுவை நகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ராமச்சந்திரன் (31) என்ற மகன் உள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜி இறந்து விட்ட நிலையில் சத்யா வாணரப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் திருமணம் செய்யாமல் சின்ன முதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் குடும்பம் நடத்தி வந்தார்.

இதற்கிடையே ஆறுமுகம் கடந்த சில நாட்களாக சத்யா வீட்டுக்கு வருவது இல்லை. இதனால் சத்யா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் விரக்தி அடைந்த சத்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சத்யா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com