சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து: மேலும் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.சி.பி.க்கு அனுமதி

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை என்.சி.பி. காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மேலும் நான்கு பேரை 11-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டது. இந்த விருந்தில் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார்.

இவர்களில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட மூன்று பேரை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கக்கோரி மும்பை நீதிமன்றத்தில் எம்.சி.பி. மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் நேற்றில் இருந்து வருகிற 7-ந்தேதி வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 11-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே  நிகழ்சி நிறுவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். போதை விருந்து வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com