மும்பையில் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ பில்லரில் மோதிய கிரேன்- ஒரு பெண் உயிரிழப்பு

மும்பையில் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ தூண் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில ஒரு பெண் உயிரிழந்தார்.
கிரேன் விழுந்ததில் சேதமடைந்த ஆட்டோ
கிரேன் விழுந்ததில் சேதமடைந்த ஆட்டோ
Published on

மும்பை:

மும்பையின் அந்தேரி கண்டவலி பேருந்து நிறுத்தத்தில் இன்று  காலை பயணிகள் பேருந்துக்கு காத்திருந்தனர். அங்கு மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு கிரேனை, வேறு இடத்திற்கு நகர்த்தும் முயற்சியில் டிரைவர் ஈடுபட்டிருந்தார்.  அப்போது, கிரேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ தூண் மீது மோதியது. அத்துடன் கிரேனின் ஒரு பகுதி உடைந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது விழுந்தது.

இதில், ஒரு பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com